பிளாஸ்டிக் ஒயர் கூடையில் கோதுமை முடிச்சு போடுவது எப்படி? How To Tie Wheat Knot In Plastic Wire Basket?
நாம் நமது Amazing DIY World பக்கத்தில் அடிப்படை முடிச்சு(Basic Knots) போடுவது எப்படி என்று பயிற்சி செய்து வருகிறோம். அந்த வரிசையில் முந்திய கட்டுரையில் அடிப்படை முடிச்சை(Basic Knot) எவ்வாறு போடுவது என்று பார்த்து வந்தோம். அதே போல முடிச்சுகளின் வகைகளில் ஒன்றான கோதுமை முடிச்சை(Wheat Knot) எவ்வாறு போடுவது என்பதை பற்றி தான் இந்த கட்டுரை உங்களுக்கு பயிற்சி அளிக்க போகிறது.
கோதுமை முடிச்சு(Wheet Knot):
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
பெயரை கேட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த முடிச்சு கோதுமை(Wheat) மணிகளை போன்று அமைப்பில் இருப்பதால் இதை கோதுமை முடிச்சு(Wheat Knot) என்று நாம் அழைக்கிறோம். இந்த முடிச்சை போடுவது மிகவும் எளிமையான ஒரு விஷயமே. நீங்கள் சற்று கவனமாக பார்த்து தெரிந்து கொள்வதன் மூலம் இதை மிகவும் எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
- 4 துண்டு பிளாஸ்டிக் ஒயர்(1 அடி)
- 1 கட்டு பிளாஸ்டிக் ஒயர் (துண்டு ஒயரின் நிறத்தை விட்டு வேறு நிறமாக இருந்தால் சிறப்பு).
- கத்தரிக்கோல்
கோதுமை முடிச்சை(Wheat Knot) போடும் முறை:
Step 1:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
Step 2:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
“+” போல ஒயர்களை வைத்த இடத்தில் உங்கள் கட்டைவிரலையும் நடுவிரலையும் வைத்து நன்றாக அழுத்தி ஒயர்கள் நகர்ந்து செல்லாத அளவுக்கு பிடித்து கொள்ளவும்.
Step 3:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
இப்போது மேலே படத்தில் உள்ளது போல கட்டு ஒயரை(நீல நிறம்)(Running Wire) ஒரு முட்டை வடிவில் மடித்து நீங்கள் முன்பு கட்டை விரலையும் நடுவிரலையும் வைத்து அழுத்தி பிடித்த இடத்தில் இப்போது மேலே படித்தால் உள்ளது போல துண்டு ஒயரின்(வெள்ளை நிறம்) மையப்பகுதியில் அழுத்தி பிடித்து கொள்ளுங்கள்.
Step 4:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
அழுத்தி பிடித்த இடத்தில் இருந்து கையை விளக்காமல் நன்றாக அழுத்தி பிடித்தவாறே துண்டு ஒயரான வெள்ளை நிற ஒயரை மேலே படத்தில் காட்டியது போல மேலே எடுத்து விடுங்கள்.
Step 5:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
Step 6:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
இப்போது நீங்கள் மேலே செய்த அதே பயிற்சியை தான் மீண்டும் செய்ய போகிறீர்கள். இப்போதும் உங்கள் நீல நிற ஒயரனாக கட்டு ஒயரை கொண்டு மறுபடியும் முட்டை வடிவ அமைப்பை மேலே படத்தில் உள்ளது போன்று உருவாக்கி உங்கள் விரல்களால் நன்றாக அழுத்தி பிடித்து கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த பயிற்சியை செய்யும் போது உங்கள் விரல்களால் முன்பு பிடித்த இடம் நழுவலாம் . எனவே கவனமாக அந்த முதல் முடிச்சு நழுவாதவாறு விரல்களை கொண்டு நன்றாக பிடித்து கொள்ளுங்கள்.
Step 7:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
இப்போது நீங்கள் விரல்களால் பிடித்த இடத்தை நழுவ விடாமல் முன்பு செய்ததை போலவும் படித்தால் மேலே காண்பிக்க பட்டது போலவும் அந்த துண்டு ஒயரை(வெள்ளை நிறம்) நீல நிற ஒயரில் உருவாக்கப்பட்ட அந்த முட்டை வடிவ அமைப்பிற்கு வெளியே வருமாறு எடுத்து விடவும்.
ஒவ்வொரு படியை நீங்கள் செய்து வரும் போதும் மேலே படித்தால் காட்டியது போல அமைப்பை அது தருகிறதா என்று பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்.
Step 8:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
இப்போதும் நீங்கள் மேலே செய்த அதே படியை தான் செய்ய போகிறீர்கள். உங்கள் விரல்களை கொண்டு அழுத்தி பிடித்து இடத்தில் உங்கள் பிடியை நழுவ விடாமல் அதே போல அழுத்தி பிடித்தவாறு கட்டு ஒயரை(நீல நிறம்) ஒரு முனையை பிடித்து இழுத்து முடிச்சு விழுமாறு நன்றாக இழுக்கவும்.
மேலே படத்தில் காட்டியபடியே இழுக்கவும். இப்போது உங்களுக்கு கோதுமை முடிச்சு கிடைத்து விட்டது.
Step 9:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
இப்போது நீங்கள் உங்கள் இரண்டாவது முடிச்சை போடா தயராக உள்ளீர்கள். இரண்டாவது துண்டு ஒயரை(வெள்ளை நிறம்) எடுத்து முதல் படியில் எப்படி “+” குறியை போன்ற அமைப்பை கொண்டு நீங்கள் முட்டை வடிவ முடிச்சி போட்டு முடித்த்தீர்களோ அதே போல போடுங்கள்.
Step 10:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
Step 11:
![]() |
How To Tie Wheat Knot In Plastic Wire Bag |
நீங்கள் முதலில் சொன்னது போல மொத்தம் 4 துண்டு ஒயர்களை எடுத்து வைத்திருப்பீர்கள். அதை கொண்டு மேலே சொன்ன அதே முறையில் இன்னும் 2 அடுக்கு மற்றும் மேலும் அதன் மேலே இன்னும் 2 கோதுமை முடிச்சுகளை பயிற்சி செய்து பாருங்கள்.
பயிற்சியின் முடிவில் மேலே படத்தில் உள்ள அமைப்பை எங்கள் பெற்றால் நீங்கள் வெற்றிகரமாக கோதுமை முடிச்சை போடா தயாராகி விட்டீர்கள் என்று பொருள்.
முடிவுரை:
இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதா இருந்தால் எங்கள் பக்கத்தை பின்தொடர்ந்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு நாங்கள் பதிவிடும் அனைத்து கட்டுரைகளும் உங்களுக்கு உடனடியாக வந்து சேரும். இந்த கட்டுரை பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் பயனடைய செய்யுங்கள்.