அடிப்படை முடிச்சுகளின் கோர்வை(Joining Basic Knots)
முன்னுரை:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
மேலே படத்தில் உள்ளது போல நீங்கள் ஒரு அடிப்படை முடிச்சை(Basic Knot) மட்டும் பயிற்சி செய்து பார்த்திருப்பீர்கள். இன்று அந்த அடிப்படை முடிச்சை(Basic Knot) மேலே படத்தில் உள்ளது போல எவ்வாறு ஒன்றுக்கு மேல் போடுவது என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
1. ஒரு அடி நீளமுள்ள 5 வயர் துண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.2. ஒரு கட்டு வயர்(Running Wire).3. கத்தரிக்கோல்.
அடிப்படை முடிச்சை எவ்வாறு ஒன்றோடு ஒன்று இணைத்து போடுவது? (How To Join Basic Knots)
Step 1:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
முதலில் நீங்கள் ஒரு அடி நீளமுள்ள 5 வயர் துண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு Running Wire என்பதை பற்றி முன்பு ஒரு கட்டுரையில் கூறியுள்ளோம். Running Wire என்பது ஒரு கட்டு வயர்.
Step 2:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
மேலே படத்தில் உள்ள வெள்ளை நிற வயர் ஒரு Running Wire. அதன் ஒரு முனையை பிடித்து ஒரு ஆள்கட்டி விரல் அளவிற்கு சற்று இடம் கொடுத்து மடித்துக்கொள்ளுங்கள். அதிகமாக இடம் கொடுத்தாலும் தவறில்லை.
Step 3:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
அடுத்து நீங்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துள்ள ரோஸ் நிற வயரை எடுத்து அதை சம அளவாக மடித்துக்கொள்ளுங்கள். பின்பு மேலே உள்ள படத்தில் மேல் பகுதியில் உள்ளது போல மடித்து வைத்துள்ள வெள்ளை நிற வயரின் மடித்த பகுதிக்குள் ரோஸ் நிற வயரை சொருகிக்கொள்ளவும்.
Step 4:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
இப்போது மேலே படத்தில் அம்புக்குறி இட்ட வெள்ளை நிற வயரின் திரும்பிய பகுதியை மேல் நோக்கி மடித்துக்கொள்ளவும். நீங்கள் மடிப்பது Running Wire என்பதால் துண்டு வயர் போலல்லாமல், Running Wire வயரை மடித்து பிடிப்பது சற்று கடினம். எனவே சற்று கவனமாக பிடித்துக்கொள்ளுங்கள்.
Step 5:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
இப்போது நீங்கள் ரோஸ் நிற வயரின் திரும்பிய பகுதியை வெளியே எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதை மேலே படத்தில் காட்டியது போல மேல் நோக்கி மடித்துக்கொள்ளுங்கள். மடித்த அந்த ரோஸ் நிற வயரின் துண்டை எடுத்து மேலே படத்தில் காட்டியது போல வெள்ளை நிற வயரின் வளையத்தில் நுழைத்துக்கொள்ளுங்கள்.
Step 6:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
பின்பு வெள்ளை நிற வயரில் நுழைத்த ரோஸ் நிற வயரை நன்றாக இழுத்தாள் உங்களுக்கு மேலே உள்ள படத்தில் காண்பது போல அமைப்பு கிடைக்கும். அதை நீங்கள் நன்றாக இறுக்கி முடித்தால் உங்களுக்கு அடிப்படை முடிச்சு(Basic Knot) கிடைக்கும்.
Step 7:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
அடுத்து நீங்கள் வெட்டி வைத்துள்ள ரோஸ் நிற வயரின் இன்னொரு துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது வெள்ளை நிற வயரை சற்று நீட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
Step 8:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
இப்போது வெள்ளை நிற வயரை மேலே படத்தில் காட்டியது போல மடித்துக்கொள்ளுங்கள். அதை படத்தில் உள்ள அளவே இருந்தால் சிறப்பு. இப்போது எடுத்து வைத்த ரோஸ் நிற வயரையும் படத்தில் காட்டியது போல சமஅளவாக மடித்துக்கொள்ளுங்கள்.
Step 9:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
மடித்த வெள்ளை நிற வயரையும் ரோஸ் நிற வயரின் வளையத்தை பயன்படுத்தி இரண்டையும் நுழைக்கவும் . நீங்கள் முன்பு போட்ட அடிப்படை முடிச்சை போலவே.
Step 10:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
இப்போது மேலே படத்தில் அம்புக்குறி இட்ட வெள்ளை நிற வயரின் திரும்பிய பகுதியை மேல் நோக்கி மடித்துக்கொள்ளவும்.
Step 11:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
இப்போது நீங்கள் ரோஸ் நிற வயரின் திரும்பிய பகுதியை வெளியே எடுத்து கொள்ளுங்கள். பின்பு அதை மேலே படத்தில் காட்டியது போல மேல் நோக்கி மடித்துக்கொள்ளுங்கள். மடித்த அந்த ரோஸ் நிற வயரின் துண்டை எடுத்து மேலே படத்தில் காட்டியது போல வெள்ளை நிற வயரின் வளையத்தில் நுழைத்துக்கொள்ளுங்கள்.
Step 12:
![]() |
How To Join Basic Knots In Plastic Wire Bag |
பின்பு வெள்ளை நிற வயரில் நுழைத்த ரோஸ் நிற வயரை நன்றாக இழுத்தாள் உங்களுக்கு மேலே உள்ள படத்தில் காண்பது போல அமைப்பு கிடைக்கும். அதை நீங்கள் நன்றாக இறுக்கி முடித்தால் உங்களுக்கு இரண்டாவது அடிப்படை முடிச்சு(Basic Knot) கிடைக்கும்.
முடிவுரை:
இந்த பயிற்சி கொடுத்ததற்காக நீங்கள் எங்களுக்கு சில கட்டணங்களை செலுத்த வேண்டும். அந்த கட்டணங்கள்
1. 👍 இந்த பொத்தானை அழுத்துவது.
2. இந்த கட்டுரையை பிறருக்கு பகிர்வது.
3. எங்கள் Youtube Channel ஐ Subscribe செய்வது.
இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாவும் தெளிவாக புரியும்படியும் இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதே போல நீங்கள் உணர்ந்தாள் எங்களுக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும். உங்களுக்கு இந்த பயிற்சி கட்டுரையில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் எங்களுக்கு command செய்வதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் Like செய்யுங்கள். அதே போல எங்கள் Youtube பக்கத்தை பின்தொடர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.