குண்டுமல்லி முடிச்சு(Jasmine Knot)
முன்னுரை:
தேவையான பொருள்கள்:
- 1 அடி நீளமுள்ள 3 ஒயர்கள்.(வேறு வேறு நிறங்கள் இருந்தால் சிறப்பு).
- கத்தரிக்கோல்.
பிளாஸ்டிக் வயர் கூடையில் குண்டுமல்லி முடிச்சை போடுவது எப்படி? How To Make Jasmine Knot In Plastic Wire Bag?
Step 1:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
முதல் படியில் நீங்கள் உங்களுக்கு தேவையான 3 நிறங்களில் 1 அடி நீளமுள்ள வயர்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வேறு வேறு நிறங்களில் தான் போட வேண்டுமா என்ற கேள்வி உங்களுக்கு வரும். உங்களுக்கு வித்தியாசம் தெரிவதற்காவே வேறு வேறு நிறங்கள். இல்லையெனில் உங்களுக்கு பயிற்சியில் குழப்பம் ஏற்படும்.
Step 2:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
படத்தில் காட்டியது போல 2 ஒயர்களை எடுத்து சரிசமமாக மடித்து உங்கள் கைகளில் பிடித்து கொள்ளுங்கள். மேலே படத்தில் நான் இப்போது மஞ்சள் நிற வயரையும், நீல நிற வயரையும் சம அளவாக மடித்து பிடித்துகொண்டேன்.
Step 3:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
இப்போது நீங்கள் மடக்கி பிடித்த இரண்டு வயர்களிலும் வளையம் போன்ற அமைப்பு தோன்றும். இப்போது வலது கையில் இருக்கும் நீல நிற வயரின் வளையத்தை இடது கையில் இருக்கும் வயரில் மேலே படத்தில் உள்ளது போல நுழைத்து ‘V’ என்னும் வடிவம் வருமாறு பிடித்துக்கொள்ளவும். மிகவும் இறுக்காமல் கொஞ்சம் மெதுவாக பிடித்துக்கொள்ளவும்.
Step 4:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
இப்போது மேலே படத்தில் காட்டியது போல மூன்றாவது வயரான ரோஸ் நிற வயரையும் சம அளவாக மடித்து வைத்து கொள்ளவும். இப்போது உங்களுக்கு ரோஸ் நிற வயரிலும் வளையும் தோன்றும். அந்த வளையத்தை நீங்கள் இடது கையில் பிடித்திருக்கும் மற்ற இரண்டு வயரின் மேலும் சேர்த்து மேலே படத்தில் உள்ளது போல பிடித்துக்கொள்ளவும்.
Step 5:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
இப்போது மேலே படத்தில் சுட்டிக்காட்டியுள்ள பகுதியில் பாருங்கள் வளையம் தோன்றும். இப்போது உங்களுக்கு மூன்று வயர்களிலும் வளையம் தோன்றிருக்கும். இப்போது நீங்கள் அந்த வளையத்தில் வயர்களை நுழைக்கும் அளவிற்கு சற்று விளக்கி வைத்துக்கொள்ளவும்.
Step 6:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
மேலே படத்தில் உள்ள மேல் படத்தில் அம்புகுறியிட்டு சுட்டிக்காட்டிய மஞ்சள் நிற வயரின் திரும்பிய பகுதியை, அதே படத்தில் கீழ் பகுதியில் உள்ள படத்தில் அம்புக்குறி காட்டுவது போல மேல் நோக்கி மடக்கி பிடித்துக்கொள்ளவும்.
Step 7:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
இப்போது அடுத்த வயரான ரோஸ் நிற வயரின் நீண்ட பகுதியான அதன் திரும்பிய பகுதியை மேலே உள்ள படத்தில் உள்ளது போலும் இதற்கு முன்பு நீங்கள் செய்தது போலும் மேலே மடக்கி பிடித்துக்கொள்ளவும்.
Step 8:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
இப்போது மேலே படத்தில் அம்புக்குறி மூலம் சுட்டிக்காட்டிய அந்த நீல நிற வயரின் திரும்பிய பகுதியை நீங்கள் முன்பு செய்தது போலவே மேல் நோக்கி மடக்கி பிடித்துக்கொள்ளவும்.
Step 9:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
இப்போது மேலே படத்தில் உள்ளது போல உங்களுக்கு 6 வயர்கள் கிடைக்கும் அந்த வயர்களை நீங்கள் அம்புக்குறி உள்ள திசையில் பிடித்து இழுத்துக்கொள்ளவும். நீங்கள் நன்றாக அந்த வயர்களை இழுக்கும் போது உங்களுக்கு குண்டுமல்லி முடிச்சு கிடைத்துவிடும்.
Step 10:
![]() |
How To Make Jasmine Knot In Plastic Wire Bag |
இறுதியாக இந்த பயிற்சியில் உங்களுக்கு கிடைத்தது பிஸ்கட் முடிச்சு. ஆம்! நேயர்களே உங்களுக்கு பிஸ்கட் முடிச்சு கிடைத்துவிட்டது. இந்த வெற்றிகரமான பயிற்சி முடிவை கொண்டாடுவதற்காக நீங்கள் உங்கள் பதில் காணும் 👍 இந்த பொத்தானை அழுத்தி எங்கள் பயிற்சிக்கு உங்களது நன்மதிப்பை கொடுங்கள்.
முடிவுரை:
இந்த பயிற்சி கொடுத்ததற்காக நீங்கள் எங்களுக்கு சில கட்டணங்களை செலுத்த வேண்டும். அந்த கட்டணங்கள்
1. 👍 இந்த பொத்தானை அழுத்துவது.
2. இந்த கட்டுரையை பிறருக்கு பகிர்வது.
3. எங்கள் Youtube Channel ஐ Subscribe செய்வது.
இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாவும் தெளிவாக புரியும்படியும் இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதே போல நீங்கள் உணர்ந்தாள் எங்களுக்கு உங்கள் கருத்தை தெரிவிக்கவும். உங்களுக்கு இந்த பயிற்சி கட்டுரையில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் எங்களுக்கு command செய்வதன் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் Like செய்யுங்கள். அதே போல எங்கள் Youtube பக்கத்தை பின்தொடர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி.