Enjoy FREE DELIVERY on orders above ₹1000! A shipping charge of ₹99 applies to orders below ₹1000

மேக்ரம் என்றால் என்ன? What Is Macrame ?

What is Macrame
What is Macrame

மேக்ரம் என்றால் என்ன? What is Macrame? 

     மேக்ரம்(Macrame) என்பது கைவினை பொருள்களை உருவாக்கும் ஒரு நுட்பமாகும். இந்த மேக்ரம்(Macrame) நூல் இழைகளை பல்வேறு வடிவங்களில் முடிச்சுகளை போடுவதான் மூலம் பல்வேறு கைவினை பொருள்களை உருவாக்க முடியும். சுவரில் தொங்கவிடப்படும் பல்வேறு கலைபொருள்கள், மேக்ரம்(Macrame) கை பைகள், மற்றும் பல்வேறு கைவினை பொருள்களை உருவாக்க இந்த மேக்ரம் நூலிழைகள் பயன்படுத்தப்படுகிறது. 

What is Macrame
What is Macrame

    மேக்ரம்(Macrame) என்ற ஒரு பொருளை பற்றியும் அதை கொண்டு என்னென்ன கலைபொருள்களும், கைவினை பொருள்களும் உருவாக்க முடியும் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள் இந்த கட்டுரையை முழுமையாக படித்து பாருங்கள். 

மேக்ரம் உருவாக்கம்(Macrum formation):

What is Macrame
What is Macrame

    மேக்ரேம்(Macrame) என்பது ஒரு துணியை எவ்வாறு வடிவமைக்கிறோமோ அதே போல வடிவமைக்கும் ஒரு  நுட்பமான ஒரு முறையாகும். நெசவு செய்யும் நெசவாளர்கள் எவ்வாறு பல இழைகளை ஒன்றாக இணைத்து ஒரு ஆடையை உருவாக்குகிறார்களோ அதே போல தான் இந்த மேக்ரம்(Macrame) இழைகளை ஒன்றாக இணைத்து ஒரு கைவினை பொருளை நாம் உருவாக்க போகிறோம். 

What is Macrame
What is Macrame

    மேக்ரம்(Macrame)  பல முடிச்சுகளை உருவாக்கும் போது ஒரு வடிவத்தை கொடுக்கும். அந்த ஒவ்வொரு மேக்ரம்(Macrame) முடிச்சையும் உங்கள் கைகளால் உருவாக்க முடியும்.  மேலும் நீங்கள் உங்கள் தேவைக்கேற்றர் போல அதை சில பொருள்களை மட்டும் இணைக்க வேண்டி இருக்கும். எடுத்துக்காட்டாக வளையம், பாசி, மற்றும் சில கைபிடிகள். இதை தவிர வேறு எந்த ஒரு கருவியும் இதை உருவாக்க உங்களுக்கு தேவை படாது என்பதே இதன் சிறப்பு. 

மேக்ரம் வரலாறு (History of Macrame):

What is Macrame
What is Macrame

மேக்ரம்(Macrame) என்பது 19 ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கலைப்பொருளாகும். இது அரேபியாவின் மேற்கு பகுதியில் உருவான ஒரு கலைவடிவமாகும். இந்த பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள் நெய்த முடிச்சுகளை கொண்டு விரிப்புகள் மற்றும் சால்வைகளின் முடிச்சுகளை போட மட்டுமே இந்த மேக்ரம் முடிச்சுகளை  பயன்படுத்தினர். 

மேக்ரேம் முடிச்சுகளின் வகைகள்(Types of Macrame Knots):

What is Macrame
What is Macrame

    நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டிய மேக்ரம்(Macrame) முடிச்சுகள் பல்வேறு வகைகள் உள்ளன. மேலும் இந்த மேக்ரம்(Macrame) முடிச்சுகள்  போடுவது மிகவும் எளிமையானவை. இந்த   மேக்ரம்(Macrame) முடிச்சுகளில் உள்ள பொதுவான  முடிச்சுகள் அரை முடிச்சு மற்றும் சதுர முடிச்சு என்று அழைக்கப்படுகின்றன.  இந்த முடிச்சுகள் பற்றி நமது Amazing DIY World பக்கத்தில் மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் விவரிக்க உள்ளோம். நமது இணைய பக்கத்துடன் எப்போதும் இணைந்தே இருங்கள். 

மேக்ரம் பயன்கள்(Macrame uses):

What is Macrame
What is Macrame

    உங்களுக்கு இந்த மேக்ரம்(Macrame) பொருள்களில் பல்வேறு பயன்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு பயன்படுகளும் உங்கள் கலை திறனை பொறுத்தே அமையும் படி உள்ளன. முடிச்சுப் எவ்வாறு போடுவது என்று நீங்கள் பழகிவிட்டால், நீங்கள் உங்கள் சொந்த மேக்ரம்(Macrame) வடிவங்களை உருவாக்கி, உண்மையான தனித்துவமான மேக்ரம்(Macrame) வடிவங்களை கொண்டு வர முடியும். 

What is Macrame
What is Macrame

        சுவரில் தொங்கும் அழகு பொருள்கள், சங்கிலிகள், நாற்காலிகள், பெல்ட், சிறிய வடிவிலான நகைகள், மற்றும் பிற ஜவுளி வடிவங்கள் இது போன்ற பல பொருள்களை நீங்கள் தயாரிக்க முடியும்.  மேலும்  எல்லா வயதினரும் இந்த கைவினைப்பொருளை உண்மையிலேயே விரும்பும் படி இது இருக்கும். 

    இந்த பதிவு உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து கொள்ளுங்கள். மேலும் இது போன்ற தகவலுக்கு எங்கள் யுட்யூப் பக்கத்தை பின்தொடர்ந்து கொள்ளுங்கள். நன்றி. 

பிளாஸ்டிக் வயர் 2 ரோல் கிராஸ் கட் கூடை போடுவது எப்படி ? (How To Make 2 Roll Cross Cut Wire Bag?)
தமிழ் -1 Roll Dots Crosscut Plastic Wire Bag – Full Tutorial for Beginners

Comments (0)

  1. பெயரில்லா

    மிகவும் உபயோக தரமானது மிக்க நன்றி சகோதரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

My Cart
Wishlist
Recently Viewed
Categories

FREE DELIVERY

Enjoy FREE DELIVERY on orders above ₹1000! A shipping charge of ₹99 applies to orders below ₹1000


Compare Products (0 Products)