பிளாஸ்டிக் ஒயர் கூடையின் முடிச்சுகளின் வகைகள்!!! Types Of Knots In a Plastic Wire Bag!!!

, by irfan.syed025, 6 min reading time

 பிளாஸ்டிக் ஒயர் கூடை(Plastic Wire Bag)


    Types of Knots in a Plastic Wire Bag
    Plastic Wire Bag

       
     👉 பிளாஸ்டிக்(Plastic) என்ற ஒன்று கண்டுபிடித்த நாள் முதல் மக்களுக்கு அது இன்றியமையாத ஒரு பொருளாகவும் மிகவும் பயனுள்ள ஒரு பொருளாகவும் உருவெடுத்து விட்டது. எவ்வளவு தான் நாம் அதை பயன்படுத்துதல் ஆபத்து என்று கூறினாலும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் பிளாஸ்டிக்கின் தேவையை நாடி செல்ல வேண்டிய நிலையில் தள்ளப்படுகிறோம். 

        👉 பிளாஸ்டிக் கை பைகளை(Use & Throw) ஒழிக்க முடியாது என்ற சூழ்நிலையில் அதை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எப்படியும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுசூழலுக்கு நிறைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்கவே பிளாஸ்டிக் ஒயரில் தயாரிக்கப்பட்ட, நீண்ட நாள் உபயோகப்படுத்தும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஒயர் பைகள்(Plastic Wire Bag) மக்களின் கைகளில் புழக்கத்திற்கு வர ஆரம்பித்தது.

    Types of Knots in a Plastic Wire Bag
    Plastic Wire Bag

        👉 அதை எவ்வாறு தயாரிப்பது என்று ஒரு முழுமையான பயிற்சியை உங்களுக்கு கற்று தருவதே எங்கள் வலைதளத்தின் நோக்கம். அது மட்டும் இல்லாமல் அந்த பிளாஸ்டிக் ஒயரை(Plastic Wire) பயன்படுத்தி உங்களுக்கு தேவைப்படும் வேறு சில பொருள்களையும் எவ்வாறு செய்வது என்று உங்களுக்கு சொல்லி தர காத்திருக்கிறோம். 

    ஒயர்:

    Types Of Knots In a Plastic Wire Bag
    Plastic Wire

        👉 பிளாஸ்டிக் ஒயர் பல வகைகளில் கடைகளில் கிடைக்கிறது. இப்போது இணையத்தளங்களின் Online Purchase மூலமாக கூட கிடைக்கிறது. இந்த கூடையை நீங்கள் எவ்வாறு உருவாக்குவது என்று நீங்கள் விரும்பினால் இந்த பிளாஸ்டிக் ஒயரை 2 நிறங்களில் இரண்டு கட்டுகள் வாங்கி கொள்ளவும். இரு கட்டு பிளாஸ்டிக் ஒயர் 200 கிராம் அளவு கொண்டதாக இருக்கும்.

    முடிச்சுகள்(Knots):

        👉 பிளாஸ்டிக் ஒயர் கூடையை(Plastic Wire Bag) முடிச்சுகளை கொண்டு தான் போட வேண்டும். அந்த முடிச்சுகள் மொத்தம் 7 வகை உள்ளது. அவை 

    1. அடிப்படை முடிச்சு(Basic Knot) 

    2. நெல்லிக்காய் முடிச்சு(Amla Knot)

    3. பலா முள் முடிச்சு(Jackfruit Knot)

    4. குண்டு மல்லி முடிச்சு (Jasmine Knot)

    5. சிவன் கண் முடிச்சு (Sivan Eye Knot)

    6. கோதுமை முடிச்சு (Wheet Knot)

    7. பிஸ்கட் முடிச்சு (Biscuit Knot)

    1. அடிப்படை முடிச்சு(Basic Knot): 

    Types of Knots in a Plastic Wire Bag
    Types of Knots in a Plastic Wire Bag

       👉 மேலே நீங்கள் படத்தில் பார்ப்பது தான் அடிப்படை முடிச்சு. அந்த முடிச்சு போடுவதன் மூலம் நீங்கள் அடிப்படையான பிளாஸ்டிக் ஒயர் கூடைகளை எவ்வாறு போடுவது என்பதை கற்று கொள்ளலாம். 

    2. நெல்லிக்காய் முடிச்சு(Amla Knot):

    Types of Knots in a Plastic Wire Bag
    Types of Knots in a Plastic Wire Bag

        👉 இந்த முடிச்சு பார்ப்பதற்கு நெல்லிக்காயின் வெட்டுக்கள் போல அமைப்பை கொண்டிருக்கும். இது அடிப்படை முடிச்சின் அடுத்த படி. 

    3. பலா முள் முடிச்சு(Jack Fruit Knot):

        

    Types of Knots in a Plastic Wire Bag
    Types of Knots in a Plastic Wire Bag

    👉 இந்த முடிச்சு பாலா பழத்தின் மேல் தோளில் உள்ள முட்களை போல அமைப்பை கொண்டிருப்பதால் இந்த பெயரை  பெற்றுள்ளது.

    4. குண்டு மல்லி முடிச்சு(Jasmine Knot):

        

    Types of Knots in a Plastic Wire Bag
    Types of Knots in a Plastic Wire Bag

    👉 இந்த முடிச்சு மல்லிகை பூவின் அமைப்பை கொண்டிருக்கும். 

    5. சிவன் கண் முடிச்சு(Sivan Eye Knot):

    Types of Knots in a Plastic Wire Bag
    Types of Knots in a Plastic Wire Bag

    6. கோதுமை முடிச்சு(Wheet Knot):

    Types of Knots in a Plastic Wire Bag
    Types of Knots in a Plastic Wire Bag

    7. பிஸ்கட் முடிச்சு(Biscuit Knot):

    Types of Knots in a Plastic Wire Bag

    முடிவுரை:

        👉 இந்த முடிச்சுகள் எப்படி போடுவது மற்றும் இதை பயன்படுத்தி எவ்வாறு கூடையை முழுமை அடைய செய்வது என்று எல்லாம் இனி வரும் நாட்களில் கற்று கொள்ள போகிறோம் 

        👉 இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் உங்கள் e-mail id  ஐ கொடுத்து எங்கள் பக்கத்தில் இணைந்து கொள்ளவும். அப்போது தான் உங்களுக்கு நாங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் உடனடியாக வந்து சேரும். 

        👉 இந்த பக்கத்தில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எங்களுக்கு Command செய்யவும். உங்களுக்கு சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.


    Blog posts

    © 2026 ADW CRAFT'S, Powered by Shopify

      Login

      Forgot your password?

      Don't have an account yet?
      Create account