பிளாஸ்டிக் ஒயர் கூடை அடிப்படை முடிச்சு (Plastic Wire Bag Basic Knot)
![]() |
Basic Knot |
முன்னுரை:
பிளாஸ்டிக் என்ற ஒரு பொருள் மக்களின் புழக்கத்தில் வந்த நாள் முதலே நாம் பிளாஸ்டிக் கூடைகளை(Plastic Wire Bag) பயன்படுத்த தொடங்கி விட்டோம். குறிப்பாக தமிழகத்தில் இந்த பிளாஸ்டிக் கூடைகளின்(Plastic Wire Bag) பயன்பாடு அதிகமாகவே உள்ளது. அந்த பிளாஸ்டிக் கூடைகளை(Plastic Wire Bag) பற்றிய அடிப்படையான தகவல்களை தான் இந்த கட்டுரையில் நீங்கள் கற்றுக்கொள்ள போகிறீர்கள்.
![]() |
Basic Knot |
👉 மேலே உள்ள புகைப்படம் தான் பிளாஸ்டிக் கூடை போடுவதற்கு அடிப்படையான முடிச்சு(Basic Knot). இது போல மொத்தம் 6 முடிச்சுகள் உள்ளன. அதில் இந்த முடிச்சு தான் அடிப்படை. அதை பற்றி முதல் கட்டுரையில் கூறியுள்ளோம். அதில் இந்த அடிப்படை முடிச்சை(Basic Knot) எப்படி போடுவது என்பதை பற்றி இங்கு நாம் காணவிருக்கிறோம். மேலே நீங்கள் காணும் முடிச்சு(Knot) தான் மிகவும் முக்கியம், எனவே நீங்கள் அதை கவனமாக கற்று கொள்ள வேண்டும்.
👉 அதே போல இதை பார்த்து நீங்களும் செய்து பார்த்தால் தான் இதே போல எளிமையாக நீங்களும் கூடைகளை போடலாம். எனவே முயற்சி செய்து பாருங்கள். இதற்கு தேவையான பொருள்கள் கீழே உள்ள பட்டியலை பார்த்து அதை தயார் நிலையில் வைத்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
1. பிளாஸ்டிக் ஒயர் – 2 துண்டுகள்(1 அடி) (வெவ்வேறு நிறங்களாக இருந்தால் சிறப்பு).
2. கத்தரிக்கோல்
பிளாஸ்டிக் கூடையில் அடிப்படை முடிச்சு போடுவது எப்படி? (How To Make Basic Knot Of Plastic Wire Bag?)
Step 1 :
![]() |
Basic Knot Making |
👉 முதலில் பிளாஸ்டிக் ஒயரை(Plastic Wire) இந்த புகைப்படத்தில் உள்ளது போல இரண்டு சம அளவுள்ள துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
![]() |
Basic Knot Making |
👉 பின்பு அதில் ஒரு பிளாஸ்டிக் ஒயர் துண்டை(நீல நிறம்) எடுத்து மேலே உள்ள புகைப்படத்தை போலவே சம அளவாக மடித்து கொள்ளவும். அதன் பின்பு மற்றொரு துண்டையும்(மஞ்சள் நிறம்) எடுத்து முன்பு செய்தது போலவே சம அளவாக மடித்து கொள்ளவும்.
![]() |
Basic Knot Making |
Step 2:
![]() |
Basic Knot Making |
👉 இப்போது இடது கையில் உள்ள மஞ்சள் நிற ஒயரை எடுத்து வலது கையில் உள்ள நீல நிற ஒயரில் உள்ள வளையத்தில்(Loop) மேல படத்தில் உள்ளது போல சொருகவும். படத்தில் காட்டியது போல சற்று கீழே தள்ளி பிடித்து கொள்ளவும்.
Step 3:
![]() |
Basic Knot Making |
👉 இப்போது அந்த இரண்டு ஒயரிலும் ஒரு பகுதி மேல்நோக்கியும் மற்றோரு பகுதி கீழ் நோக்கியும் இருக்கும். அந்த இரண்டு ஒயரின் கீழ் பகுதியையும் மேலே படத்தில் உள்ளது போல மேல் நோக்கி பார்வைக்கு படும்படி அகலமாக வைக்கவும் வைத்துக்கொள்ளவும்.
Step 4:
![]() |
Basic Knot Making |
👉 இப்போது மேல்நோக்கி இருக்கும் நீல நிற ஒயரின் பகுதியை மேலே படத்தில் காட்டியது போல மேல்நோக்கி மடித்து பிடித்து கொள்ளவும்.
Step 5: (முக்கியமான பகுதி – கவனமாக செய்யவும்)
![]() |
Basic Knot Making |
👉 இப்போது மேல்நோக்கி திரும்பிய நிலையில் உள்ள மஞ்சள் நிற ஒயரை எடுத்து படத்தில் காட்டியது போல நீல நிற ஒயரின் வளையத்தில்(Loop) சொருகி கொள்ளவும். அவ்வாறு நீங்கள் சொருகும் போது உங்களுக்கு கீழே படத்தில் உள்ளது போன்ற அமைப்பை அது தரும்.
![]() |
Basic Knot Making |
Step 6:
👉 இப்போது மேலே படத்தில் உள்ள அமைப்பின் ஒவ்வொரு 4 மூலைகளையும் நன்றாக இறுகும் அளவிற்கு பிடித்து இழுத்து கொள்ளவும். இப்போது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற அமைப்பு வரும்.
![]() |
Basic Knot Making |
😊😊வெற்றிகரமாக நீங்கள் முதல் பாடத்தை முடிவு செய்துள்ளீர்கள்.
முடிவுரை:
👉 மேலே நீங்கள் முயற்சி செய்த முடிச்சு தான் பிளாஸ்டிக் ஒயர் கூடை(Plastic Wire Bag) போடுவதற்கு அடிப்படை முடிச்சு(Basic Knot). இதை நீங்கள் எவ்வளவு முறை முயற்சி செய்து பார்த்தாலும் அது நல்லது என்றே கூறலாம். இது போலவே மீதம் உள்ள 5 அடிப்படை முடிச்சுகளை பற்றி அடுத்து வரும் கட்டுரையில் காணவிருக்கிறோம்.
👉 எங்கள் பகுதியில் பதிவிடும் கட்டுரைகள் அனைத்தும் உங்களுக்கு உடனடியாக வர எங்கள் பக்கத்தை உங்களது e-mail id கொடுத்து Subscribe செய்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு நாங்கள் பதிவுடும் அனைத்து பதிவுகளும் உடனடியாக வந்து சேரும்.